Top 20 Abraham Lincoln Tamil Quotes | ஆபிரகாம் லிங்கன் பொன்மொழிகள்

ஆபிரகாம் லிங்கன் பொன்மொழிகள்:

 1.ஏமாற்றுவதை காட்டிலும் தோற்றுப்போவது   மரியாதைக்குரியது.

2. நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி தந்து என்னை சந்திப்பவனே என் தலை சிறந்த நண்பன்.

3. நான் மெதுவாத நடப்பவன்.ஆனால் ஒருபோதும் பின்னோக்கி நடப்பதில்லை.

4. ஒரு பலசாலியின் பலத்தை குறைப்பதால் ஒரு பலவீனன் பலசாலியாகிவிட முடியாது.

5. ஒரு மரத்தை வெட்ட எனக்கு ஆறு மணி நேரம் கொடுங்கள்.அதில் முதல் நான்கு மணி நேரத்தை கோடரியை கூர்மைப்படுத்தவே  செலவிடுவேன்.

6. கீழ் நோக்கி பார்க்கும் ஒருவன் நாத்திகம் பேசலாம்.மேல்நோக்கி பார்க்கும் எவனும் கடவுள் இல்லை என்று சொல்லமாட்டான்.

7. உங்களுடைய எதிரியை தன்னுடைய எதிரியாக நினைப்பவனே உங்கள் நண்பன்.

8. திறமையின் மூலம் புகழ் பெறலாம்.ஆனால் ஒழுக்கத்தின் மூலமே ஒரு மனிதன் சிறந்த மனிதனாக   முடியும்.

9. சேமிப்பை அலட்சியப்படுத்துகிறவன் தன வாழ்நாளில் ஒரு நாளும் வளமையை கொண்டுவரமுடியாது.

10. தனக்கு கிடைக்கும் ஊதியத்தை மதிப்பை விட தன்னுடைய உழைப்பின் மதிப்பை உயர்த்தி காட்டும் மனிதன் தான் சமூகத்தில் முன்னேற முடியும்.

11. நீங்கள் எல்லோரையும் கொஞ்ச நாள் ஏமாத்தலாம்.கொஞ்சம் பேரை கொஞ்ச நாள் ஏமாத்தலாம்.ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது.

12. கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது.அதை காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.

13. எனக்கு வேலை செய்ய கற்பித்தார்கள். ஆனால் நான் செய்யும் நேசிக்க கற்று கொடுக்க வில்லை.

14. நீங்கள் ஒருவரின் குணத்தை சோதித்து பார்க்க வேண்டுமானால் அவரிடம் அதிகாரத்தை கொடுத்து பாருங்கள்.

15. இறுதியில் மிஞ்சுவது வருடங்களின் எண்ணிக்கையில் அல்ல.அதில் வாழ்ந்த வாழ்கை மட்டுமே.

16. நான் அடிமையாக இருக்கமாட்டேன்.ஆகவே நான் எஜமானனாகவும் இருக்க மாட்டேன்.இதுதான் ஜனநாயக கோட்ப்பாட்டின் அடிப்படைத்தத்துவோம்.

17. முன்னேற வேண்டும் என்று விரும்பினால் யாருடனும் சண்டை போடாதீர்கள். அதில் நேரம் வீணாகிறது.நாயிடம் கடிபடுவதை விட நாய்க்கு வழிவிடுவதே மேல்.

18. இன்றைய தவிர்ப்பின் மூலம் உங்களால் நாளைய பொறுப்புகளிலிருந்து   தப்பிக்க முடியாது.

19. எதிர்காலம் பற்றிய ஒரு சிறந்த விஷயம் என்னவென்றால் , அது ஒரு நாள் வந்தே தீரும் என்பதே.

20. வாக்குசீட்டு தோட்டாக்களை விட மதிப்பு வாய்ந்தவை.

No comments:

Post a Comment